Tamil Movie Ads News and Videos Portal

2.0 விமர்சனம்

மனிதன் கொண்டுவரும் அறிவியல் வளர்ச்சி மற்ற உயிரினங்களுக்கு பாதிப்பை கொடுக்கக் கூடாது என்பது தான் 2.O படத்தின் அடிப்படை.

ரஜினி என்ன செய்தால் நாம் ரசிப்போம் என்ற பாயிண்டைப் பிடித்திருப்பதற்கு முதல் நன்றி இயக்கநர் சங்கருக்கு. சிட்டி ரஜினி, சுட்டி ரஜினி, வசீகரன் ரஜினி, 2.O ரஜினி என ஒவ்வொரு ரஜினியும் படத்தில் அதகளம். அக்‌ஷய்குமாரோடு மோதும் போதும் எமிஜாக்‌ஷனோடு குழையும் போதும் 2.O உ ஊ.

தமிழ்சினிமாவில் மைடியர் பூதம் படத்திற்கு பிறகு 3D படம். அதுவும் ரஜினி சங்கர் இணைந்த படம். அதுவும் மிகப் பிரம்மாண்டமான படம். இருவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். விஷுவல்ஸில் படத்தில் துளி பிசிறையும் கண்டுவிட முடியாது.
ஆனால் அது மட்டும் போதுமா?

தனது எல்லா படத்திலும் அநீதிசெய்யும் சூப்பர் பவர் கேரக்டர்ஸுக்குப் பின் ஒரு நியாயத்தை வைத்திருப்பார் சங்கர். இதிலும் மக்களின் செல்போன்களைப் பறித்து அவர்களை கொலை செய்யத்துணியும் அக்‌ஷயகுமார் கேரக்டருக்கு ஒரு நியாயம் வைத்திருக்கிறார். அது சொல்லப்பட்ட விதம் தான் கம்ப்ளீட் பீல் தரவில்லை. ஒரு கட்டத்தில் ரஜினி அக்‌ஷயகுமாரை ஒழித்துக்கட்ட களம் இறங்கும் போது, “ஏம்பா அவரு சொல்றது சரிதானப்பா” என்று தோன்றுவதை கதையின் சறுக்கலாகவே பார்க்க வேண்டிய இருக்கிறது. ஜெயமோகன், சங்கர் இருவரின் வசனங்கள் பல இடங்களில் அட போட வைக்காமல் இருப்பதும் வடபோச்சே ஃபீலை தருகிறது. மிஸ் யூ சுஜாதா சார்!

ஏ.ஆர். ஆர் ஆரில் மட்டும் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் பைட்டில். எமிஜோக்‌ஷன் பாடிலாங்வேஜ் தாறுமாறு. அவர் 2.O வை டீல் பண்ற இடம் ஆசம். நீர்வ்ஷா 3D படம் என்பதை மனதில் வைத்து ஒவ்வொரு ப்ரேமையும் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடும் அளவில் செதுக்கி இருக்கிறார். ரசூல்பூக்குட்டியின் சவுண்ட் எஃபெக்டும் ஹாலிவுட் படத்தின் தரத்தை உறுதி செய்கிறது. தமிழில் ஹாலிவுட் படம் பார்க்கிறோம் என்ற கெத்து படத்தின் விஷுவல்ஸ் ட்ரீட்டைப் பார்க்கும் போது வருகிறது. ஆனால் காட்சிகள் ஏற்படுத்திய தாக்கத்தை கண்டெண்ட் தரவில்லை என்பதே ஆகப்பெரும் சோகம்.

இருந்தாலும் இந்தப்படம் குழந்தைகளை அதிகம் வசீகரப்படுத்தியும் மற்ற ஆடியன்ஸை அதிகம் ஏமாற்றாமல் இருக்கும் என்பதும் உறுதி. மேலும் லைகா புரொடக்சன்ஸை இப்படம் ஏமாற்றாமல் இருக்க வேண்டும். அதுதான் தமிழ்சினிமாவின் அடுத்தடுத்த நல்ல முயற்சிகளுக்கு வழி வகுக்கும்.

அப்புறம் ரஜினியின் “ஆன்மீக குறியீடு” என்று சொல்லும் படி படத்தில் ஒரு காட்சி இருக்கு என்று சொன்னால் சிரிப்பார்கள். பராவாயில்லை சிரிப்பு நல்லது தானே. ஒரு காட்சியில் மினிஸ்டர் சிட்டி ரஜினியைப் பாராட்டும் போது சொல்கிறார், “எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் திருமால் அவதாரம் எடுப்பார். அந்த திருமாலின் அவதாரம் தான் இந்தச் சிட்டி” என்று. மினிஸ்டரின் அந்த வசனத்திற்கு ரஜினி ஒரு புன்னகை பூக்கிறார். படத்தில் இந்திரா காந்தி, நேரு போட்டோவை விட வாஜ்பாய் போட்டோ அழகாக தெரிகிறது.