”“96” : “ஜானு” – ஒப்பீடு வேண்டாம் ப்ளீஷ் “ – சமந்தா
2018ம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ப்ரேம்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “96”. இப்படத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்ற இந்த திரைப்படம் பல மொழிகளில் ரீமேக் ஆகவிருக்கிறது. தற்போது தெலுங்கில் இப்படத்தின் ரீமேக் உருவாகியிருக்கிறது. “ஜானு” என்ற பெயரில் வெளியாகியிருக்கும் தெலுங்குப் படத்தையும் பிரேம்குமாரே இயக்கியிருக்கிறார்.
த்ரிஷா நடித்த வேடத்தில் சமந்தாவும், விஜய் சேதுபதி வேடத்தில் “எங்கேயும் எப்போதும்” சர்வானந்த் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டீஸர் சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி வரவேற்ப்பை பெற்று வரும் அதே வேளையில் 96 மற்றும் ஜானு இரு படங்கள் தொடர்பான விவாதங்களும் தொடங்கின. இதைப் பார்த்த சமந்தா ”இரு படங்களும் ஒப்பீட்டிற்காக எடுக்கப்படவில்லை. பலதரப்பட்ட மக்களும் அந்த உணர்வைப் பெறவே எடுக்கப்பட்டுள்ளது. த்ரிஷா 96 படத்தில் மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எனவே இரு படங்களையும் ஒப்பீடு செய்யவேண்டாம்” என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.