Tamil Movie Ads News and Videos Portal

தாய்லாந்தில் தொடங்கியுள்ள ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் ஷெட்யூல்!

உஸ்தாத் ராம் பொதினேனி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பான் இந்தியன் திட்டமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. இதில் முன்னணி நடிகர்களின் முக்கிய காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறது.

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இப்படத்தில் ஒரு முக்கியமான மற்றும் நீண்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் நடந்த முதல் படப்பிடிப்பில் படக்குழுவுடன் இணைந்தவர், தற்போது இரண்டாவது ஷெட்யூலிலும் இணைந்துள்ளார். தயாரிப்பாளர்கள் பகிர்ந்துள்ள படங்களில் ராம், சஞ்சய் தத், பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் மற்றும் CEO விசு ரெட்டி ஆகியோரின் மகிழ்ச்சியான முகங்களைக் காணலாம்.

பூரி ஜெகன்நாத்தின் பிரம்மாண்டமான கதையில் ராம் மிகவும் ஸ்டைலிஷான தோற்றத்தில் இந்தப் படத்தில் உள்ளார். ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மகா சிவராத்திரியான மார்ச் 8, 2024 அன்று வெளியிடப்படும்.