Tamil Movie Ads News and Videos Portal

தன் பெயரை மாற்றினார் நடிகர் ஆரி

நெடுஞ்சாலை படத்தில் அறிமுகம் ஆகி மெதுவாக பயணித்தாலும் திரையுலகில் சரியாக பயணித்து வருபவர் நடிகர் ஆரி. அவர் நடிப்பில் சென்ற வருடம் நாகேஷ் திரையரங்கம் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது சில படங்களில் நடித்து வரும் ஆரி, பிறக்கப் போகும் புத்தாண்டில் இருந்து தனது பெயரை ஆரி அருஜுனா என மாற்றியுள்ளார். அது குறித்து அவர் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பு பின் வருமாறு,

“மதிப்பிற்குரிய பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள மற்றும் வானொலி நண்பர்களுக்கும் மற்றும் என் நல விரும்பிகளுக்கும் வணக்கம் நான் உங்கள் ஆரி.
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

 

நான் சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் இன்றுவரை பயணிக்கிறேன் அதற்கு காரணம் நீங்கள் என் மேல் வைத்த நம்பிக்கையும் அன்பும் தான்,
அதை நான் என்றும் மறவேன்

இந்த புத்தாண்டு முதல்
எனது பெயரை ஆரி அர்ஜுனா என மாற்றியுள்ளேன்
எனவே இனிவரும் காலங்களில் தாங்கள் என் சம்பந்தமாக செய்தியை வெளியிடும் போதும் என்னை அழைக்கும் போதும் எனது பெயரை ஆரி அர்ஜுனா என்றே அழைக்குமாறும் வெளியிடுமாறும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இந்த புத்தாண்டில் உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேற நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என்றும் உங்கள் அன்பையும், ஆதரவையும் எதிர்பார்க்கும் ஆரி அர்ஜுனா”

HAPPY NEW YEAR 2020?