Tamil Movie Ads News and Videos Portal

மீண்டும் கொள்ளையடிப்பாரா துல்கர்

‘ஓ காதல் கண்மணி’ படத்தின் மூலம் பல இளசுகளின் மனதில் உள்ளம் கவர்ந்த கள்வனாக மாறிய துல்கர், ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் வெற்றிக்குப் பின்னர் இன்னும் அதிகமான இளைஞிகளின் மனதை கொள்ளையடித்திருக்கிறார். இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அடுத்த நேரடித் தமிழ்ப்படமாக நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் துல்கர் சல்மான். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியது.

இயக்குநர் மணிரத்னம், பாக்யராஜ், குஷ்பூ, சுகாசினி ஆகியோர் இப்படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். அதிதி ராவ் மற்றும் காஜல் அகர்வால் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றிய அனுபவமிக்க நடன இயக்குநர் பிருந்தா இயக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு “ஹே சினாமிகா” என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இது ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் வரும் ஒரு பாடல் வரி ஆகும். இப்படமும் ரசிகர்களை கொள்ளையடிக்குமா..? என்கின்ற ஆவல் கோலிவுட்டில் எழுந்துள்ளது.