தளபதி துப்பாக்கியை சிவாவிடம் வழங்கிய பின் சினிமா களமே வேறாக இருக்கிறது.அரசியலில் விஜய் ஆளப்போறார்.. சினிமாவில் சிவா அசத்தப்போகிறார் என்கின்றனர் ரசிகர்கள்
‘Sk எப்படி வந்தாலும் Ok படம் பார்ப்போம்’ என்ற லெவலில் சிவாவின் கரியர் இருக்கும் சூழலில், அவர் கமலோடு கூட்டணி சேர்ந்திருப்பதால் அமரன் படத்தின் எதிர்பார்ப்பு எங்கோ போயுள்ளது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் அமரன் படம் வரும் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. அந்த வெற்றி பட வெளியீட்டிலும் தொடரும் என்கிறார்கள். காரணம் படம் மீது இயல்பாகவே ரசிகர்களுக்கு இருக்கும் பாசிட்டிவ் வைப். மேலும் படமும் தரமாக வந்திருப்பதாக தகவல்
அமரன் அசத்தட்டும்