Tamil Movie Ads News and Videos Portal

ZEE5ல் மார்ச் 28ல் ஸ்ட்ரீமாகிறது “செருப்புகள் ஜாக்கிரதை” !

ZEE5 தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது.

SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ( சிங்கம்புலி ) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள். வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன் வெகு சுவாராஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா ,உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், director பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

உங்கள் முகங்களில் புன்னகை பூக்கச் செய்யும் இந்த “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை, வரும் மார்ச் 28 முதல் ZEE5 தளத்தில் கண்டுகளிக்கலாம். ZEE5 மனோரஞ்சன் விழா மூலம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 30 வரை, ZEE5, ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பல வெற்றிப் படங்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீரிஸ்கள், காமெடி டிராமாக்கள் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களை இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடதக்கது.