வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நாயகனாக நடிக்கும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு ஒரு வழியாக தொடங்கவிருக்கிறது. இதில் விஜய்-யின் தந்தையும் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநர் இமயம் பாரதிராஜா பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்கள்.
அப்துல் காலிக் என்கின்ற முஸ்லீம் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முதலில் கோயம்புத்தூர் பகுதிகளில் நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது ஹைதராபாத் நகரில் அமைந்திருக்கும் ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் வைத்து இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.