ஈராஸ் இண்டெர்நேஷனல் வழங்கும் படம் காடன். இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார். இப்படம் தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படம் கும்கி போல யானையை அடித்தளமாக கொண்ட கதை என்பது கூடுதல் தகவல். கும்கி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபுசாலமோன் எப்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பார் என்று கேட்டு வந்தார்கள்.
அந்தக் கேள்விக்கு பதிலாக இப்படம் இருக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். இன்று இப்படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றது. விழாவில் விஷ்ணு விஷால், தெலுங்கு வெர்சன் ஹீரோ ராணா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். விழாவில் விஷ்ணு விஷால் பேசும்போது, “நல்ல எபெக்ட் போட்டு உழைத்துள்ளோம். அனைவரும் சப்போர்ட் பண்ணுங்க” என்றார்.