இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் நடிகை லிசி தம்பதியின் மகள் கல்யாணிப்ரியதர்ஷன். இவர் தெலுங்கில் ஹலோ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியிருக்கும் “ஹீரோ” படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் சமீபத்தில் பத்திரிக்கைக்கு
அளித்த பேட்டியில், “என் பெற்றோர்களுக்கு நான் எங்களின் கம்பெனியை நிர்வாகம் செய்வதையே விரும்பினர். ஆனால் எனக்கு சினிமா தான் ஆசை. அதனால் படங்களில் நடிக்க வந்துவிட்டேன். தமிழில் தான் அறிமுகமாக வேண்டும் என்று எண்ணினேண். ஆனால் சரியான வாய்ப்பு அமையாததால் தெலுங்கில் “ஹலோ” படத்தில் நடித்தேன். இப்பொழுது தமிழுக்கும் வந்துவிட்டேன். படத்தில் நடிப்பதற்கு கதையை நானேதான் கேட்கிறேன். கதை பிடித்திருந்தால் நடிக்க சம்மதம் சொல்கிறேன். என் முடிவுகளில் என் அப்பா அம்மா இருவருமே தலையிடுவதில்லை. அப்பா என் நடிப்பை விமர்சிப்பவர். அம்மா என் ரசிகை..” என்று பேசினார்.