தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்புக்கலையில் ஒன்றான “அடிமுறைப் பயிற்சி”-யை அடிப்படையாகக் கொண்டு வெளியான தனுஷின் “பட்டாஸ்” திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எதிர்நீச்சல், கொடி படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்கியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் நடிகை ஸ்நேகா இப்படத்தில் நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில் நடிகை ஸ்நேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிமுறை பயிற்சி தொடர்பான
வீடியோவை வெளியிட்டிருக்கிறார். படத்திலும் நடிகை ஸ்நேகா அடிமுறை பயிற்சியைக் கொண்டு எதிர்களைத் தாக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோவில் அப்பயிற்சியை அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஜோவ் டல்டேகனிடம் கற்றுக் கொள்ளும் விதமும் இடம் பெற்றிருக்கிறது. இதைப் பார்க்கும் போது, தமிழகத்தின் பாரம்பரியக் கலை என்று சொல்லிக் கொண்டாலும், அதைக் கற்றுக் கொடுக்கும் மாஸ்டர்களும் தமிழில் இல்லை; அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த படமெடுத்தால் அதைப் பார்க்கவும் ஆள் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.