மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்து தயாரித்திருக்கும் படம் “ வரன ஆவிஷயமுண்டு” . அனுப் சத்யன் இயக்கியிருக்கும் இப்படத்தில் சுரேஷ்கோபி, ஷோபனா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சென்னையை மையமாகக் கொண்டு இதன் கதை நடைபெறுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் சில தினங்களுக்கு முன்னர் அமேசான் ப்ரைமில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த மும்பை பெண் நிருபர் ஒருவர் இந்தப் படத்தின் தன் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக மன்னிப்பு கேட்காவிட்டால் தான் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து படத்தின் தயாரிப்பாளரும் நாயகனுமான துல்கர் சல்மான் அந்த நிருபரிடம் மன்னிப்பு கேட்டிருப்பதோடு, இப்படம் பெண்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்பதைப் பேசும் படம் தான். ஆண், பெண் பேதம் இருக்கக் கூடாது என்பதையும் படம் பேசுகிறது. உங்கள் புகைப்படம் எப்படி படத்திற்குள் வந்தது என்பதை விசாரிக்கிறேன். உங்கள் புகைப்படத்தை பயன்படுத்தியதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார்.