Tamil Movie Ads News and Videos Portal

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த விருது

பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்திய படமான அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை இந்த வருடம் ஒரு விருதைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தொலைக்காட்சி , ஜீ தமிழ் நிறுவனத்தின் சார்பாக ஜீ சினி அவார்ட்ஸ் விருது வழங்கும் விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது .

இதில் நடிகர் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் ” Socially Responsible Movie ” என்ற விருதை வென்றது . இந்த விருதினை நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர் போனி கபூர் பெற்றுக்கொண்டார் . மேலும் நடிகர் அஜித்குமாருக்கு Most Empowering Performer of the Decade என்ற விருதும் வழங்கப்பட்டது . அஜித் குமார் சார்பாக போனி கபூர் விருதை பெற்றுக்கொண்டார் .