சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘நெற்றிக்கண்’ திரைப்படத்தில் தற்போது பிரபல நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவுள்ளது.
இதில் ரஜினிகாந்த் நடித்த வேடத்தில் அவரின் மருமகனான தனுஷ் நடிக்கவிருக்கிறார். மேனகா நடித்த வேடத்தில் அவரின் மகளான கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இதுவரை ரஜினியின் படப்பெயரில் மட்டுமே நடித்து வந்த தனுஷ் முதன்முறையாக் ரஜினிகாந்த் நடித்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். “நெற்றிக்கண் 2” என்று பெயரிடப்படவிருக்கும் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள் விரைவில் வெளியாகவிருக்கின்றன.