சில நாட்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான வரலாற்றுப்படமான மாமாங்கம் சத்தமின்றி சில சாதனைகளைப் படைத்து வருகிறது. படம் குறித்து “வசனமாகவே கதை நகர்கிறது.. மெதுவாக செல்கிறது” போன்ற எதிர்மறை விமர்சனங்கள் வெளியானாலும் கூட அது படத்தின் வசூலைப் பாதிக்கவில்லை. படத்தின்
ஓப்பனிங் அன்று மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற மூன்றாவது படம் என்கின்ற அந்தஸ்தைப் பெற்ற இப்படம் பின்னர் 4 நாட்களில் 60 கோடி வசூலித்து ஆச்சரியப்பட வைத்தது. இப்பொழுது அடுத்த ஆச்சரியமாக இப்படத்தின் சீன வெளியீட்டு உரிமையை ஹாங்காங்கைச் சேர்ந்த ஒரு பெரிய முதலீட்டு நிறுவனம் மிகப் பெரிய தொகை கொடுத்து கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. இதற்கு முன்னர் தங்கல், பாகுபலி, 2.0 ஆகிய படங்கள் மட்டும் தான் சீனாவில் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது அந்தப் பெருமையையும் பெற்றிருக்கிறது “மாமாங்கம்”.