பிரபல கிரிக்கெட் வீர்ர்கள் தமிழ்ப்படங்களில் ஆங்காங்கே தலைகாட்டத் துவங்கியிருப்பது தற்போது வழக்கமாகி இருக்கிறது. அதன் உச்சகட்டமாக இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து ஜாம்பவான் ஆன ஹர்பஜன் சிங் நாயகனாகவே தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்வியா நடிக்கவிருக்கிறார்.
ப்ரெண்ட்ஷிஃப் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் உருவாகவிருக்கிறது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் அவருக்கு போலீஸ் அதிகாரி வேடமாம். ஷேண்டோ ஸ்டூடியோஸ் மற்றும் சினிமாஸ் ஸ்டூடியோஸ் சார்பில் ஜே.பி.ஆர் மற்றும் ஷாம் சூர்யா ஆகியோர் இப்படத்தினைத் தயாரிக்கிறார்கள்.