படத்தில் நடித்ததைக் காட்டிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்தவர் நடிகை ஓவியா. அவரது பெயரில் ஓவியா ஆர்மி ஆரம்பிக்கும் அளவிற்கு அவர் மீது வெறித்தனமான அன்பை பொழியத் துவங்கினர் அவரது ரசிகர்கள். இதனால் அவரை சமூக வலைதளத்தில் ஃபாலோ செய்யும் ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம். இது போன்ற ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கேட்கும் கேள்விகளுக்கு அவ்வபோது பதில் அளித்து அவர்களை குஷிப்படுத்துவார் ஓவியா. சமீபத்தில் தான் பாஃப் கட் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
அப்படத்திற்கு வந்த கமெண்டுகளில் ஒரு ரசிகர் இப்படி குட்டையாக முடியை வெட்டினால், ஒரு துணிக்கடை விளம்பரத்திற்கு கூட கூப்பிட மாட்டார்களே..? என்று வருத்தம் தெரிவிக்க, அதற்கு பதிலளித்த ஓவியா, “என்னுடைய ரசிகர்கள் எதிர்காலத்தில் தலைவர்களாக வர விரும்புகிறேன். நான் முடியை வளர்க்க விரும்புகிறேன். முடியை அல்ல. என்னுடையை உடை, சிகை, நிறம் இவை எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அப்படி மாற்றிக் கொள்ளும் சுதந்திரமான பெண் நான். நாம் எல்லாருமே அழகானவர்கள் தான்..” என்று தெரிவித்துள்ளார்.