சினிமா திரையரங்குகளுக்கு இணையாக ஓடிடி (OTT) என்று சொல்லப்படும் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ், ஹாட் ஸ்டார், ஜூ ஃபைவ், போன்ற இணையதள நிறுவனங்கள் பெரும் பொருட் செலவில் உருவான படங்கள் மற்றும் வெஃப் சீரிஸ்களை வெளியிடத் துவங்கியுள்ளன. இவை திரையரங்குகளுக்கு மிகப்பெரிய சவாலாக எதிர்காலத்தில் மாறும் என்றும் பலரும் இப்பொழுதே பேசத் துவங்கிவிட்டனர். ஆனால் இவை இன்னும் தமிழக அளவில்

பிரபலமடையவில்லை. இருப்பினும் சமந்தா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஹன்சிகா மோத்வானி என முன்னணி நட்சத்திரங்கள் ஏற்கனவே வெஃப் சீரிஸில் நடிக்கத் துவங்கிவிட்டனர். இவர்களின் வரிசையில் தற்போது ரகுல் ப்ரீத் சிங்கும் இணையப் போகும் அறிகுறி அவரது பேச்சில் தென்படுகிறது. கடந்த ஆண்டு அவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில் அவர், “வெஃப் சீரிஸில் தான் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்துடன் திறமைக்கு தீனி போடுவது போல் இவை அமைவதால், தனக்கும் அது போன்ற தொடர்களில் நடிக்க ஆர்வம் ஏற்பட்டிருப்பதாக காரணம் கூறியிருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.