Tamil Movie Ads News and Videos Portal

ஜெய்வந்தின் புதியபடம்

ஒயிட் ஹார்ஸ் சினிமாஸ்’ VG ஜெய்வந்த் மற்றும் ஃப்ரீ ஆப் காஸ்ட் புரொடக்ஷன்ஸ்’ பூபதி ராஜா தயாரிப்பில், இயக்குனர் பூபதிராஜா இயக்கத்தில், ”1 ஷூட் 2 பிக்சர்ஸ்’ கருத்துருவாக்கத்தில் ஜெய்வந்த் நடிக்கும் #அசால்ட் & #ஃபால்ட்.

‘மத்திய சென்னை’, ‘காட்டுப்பய சார் இந்த காளி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து திரைப்படத் தயாரிப்பாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்கொண்ட நடிகர் ஜெய்வந்த், இப்படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

#அசால்ட் ஒரு சாமானியன் விதிவசத்தால் ஒரு ரவுடியை எதிர்க்க நேருகின்ற கதையை சொல்ல, #ஃபால்ட் ஒரு முற்றிலும் புதிய கதையை #அசால்ட் திரைப்படத்தின் மேக்கிங் காட்சிகளில் இருந்தே நமக்கு சொல்கிறது.

இப்படத்தில் நாயகன் ஜெய்வந்த் உடன் முக்கிய வேடங்களில் சரவணன், சென்றாயன், ராமர், கோதண்டம் நடிக்க, அவர்களுடன் சோனா, ரிஷா, தேவி, நாகு மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ராஜேஷ் குமார் NS ஒளிப்பதிவு செய்ய, அருண் கல்லுமூடு கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்று இருக்கிறார். ‘V2’ புகழ் விஜய் & விக்கி இசையமைக்க, மெட்ராஸ் மீரான், துப்பாக்கிஸ் மற்றும் பூபதி பாடல்களை எழுதியிருக்கிறார்கள்.