கிறிஸ்துமஸ் விடுமுறையில் கார்த்தியின் அடுத்த படம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘கைதி’ திரைப்படம் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. அதே போல் கைதி படத்துடன் வெளியான ‘பிகில்’ திரைப்படமும் அதே அளவிற்கு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் பிகில் படத்தோடு சேர்ந்து கைதி படம் வெளியாவதால் படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்காது, மேலும் அது கைதி படத்தின் வசூலை பாதிக்கும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் படத்தின் கதை மற்றும் திரைக்கதை வலுவாக அமைந்ததால், கைதி வெற்றியைப் பெற்றிருக்கிறது. இந்நிலையில் கார்த்தி, ஜோதிகா இணைந்து ஜுத்து ஜோசப் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் வெளியீடு தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில வாரங்களாக தீபாவளிக்கு பிகில் படத்தோடு கார்த்தியின் படம் வெளியானதைப் போல், பொங்கல் பண்டிகை விடுமுறை தினத்தில் ’தர்பார்’ படத்தோடு கைதி படத்தை வெளியிடயிருக்கிறார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தை ஒட்டி, கார்த்தியின் அடுத்த படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.