‘தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ல் வெளியாகவிருக்கிறது. அதற்குள் சூப்ப்ர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தொடங்கிவிட்டார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ப்லிம் சிட்டியில் வைத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நீண்ட
இடைவெளிக்குப் பின்னர் குஷ்பு, மீனா இருவரும் இப்படத்தில் சூப்பர் ஸ்டாருடன் நடித்து வருகிறார்கள். ரஜினிக்கு இரண்டு ஜோடிகள், கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது மீனா மட்டும் தான் ரஜினியின் மனைவியாக நடிக்கிறார் என்றும், குஷ்பு நெகடிவான வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.