‘பேட்ட’ படத்தில் நடித்த போது கூட மாளவிகா மோகனன் என்ற பெயர் பெரிதாக ரசிகர்களிடம் சென்று சேரவில்லை. ஆனால் எப்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படத்தில் நாயகியாக மாளவிகா நடிக்கிறார் என்கின்ற அறிவிப்பு வந்ததோ அப்பொழுதிருந்தே அவரைப் பற்றிய தகவல்களை ரசிகர்கள் தேடத் தொடங்கிவிட்டனர்.
இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் மாளவிகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு பார்வையாளர்களைன் லைக்குகள் மற்றும் ஷேர்களை அள்ளி வருகிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் பார்க்கோர் பயிற்சி முறையில் மோதும் சண்டைக்காட்சிகள் இடம்பெற இருப்பதால் இதற்காக தனியாக பார்க்கோர் பயிற்சியும் செய்து வருகிறாராம். பார்க்கோர் பயிற்சி என்பது உயரமான மாடிக் கட்டிடங்களில் தாவிக் குதித்து ஏறுவது, ஓடுவது போன்ற பயிற்சியாகும். இதற்கு உடல் ஃபிட்டாக இருப்பது மிகவும் அவசியம். எனவே தினமும் உடற்பயிற்சி செய்து தன் உடல் ஃபிட்டாக இருக்கிறதா என்பதைத் தான் இப்படி புகைப்படம் எடுத்து பார்த்துக் கொள்கிறார் மோகனன் என்று சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.