சைரா நரசிம்ம ரெட்டி படத்தை அடுத்து இயக்குநர் கொரட்டல் சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்திற்கு “ஆச்சாரியா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதில் நாயகியாக த்ரிஷா நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்பட்டது. பின்னர் கதாபாத்திர வடிவமைப்பு தன்னிடம் கூறும் போது வேறு மாதிரி இருந்தது என்றும், தற்போது அது வேறு மாதிரி தோற்றம் தருவதால் இப்படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்து படத்தில் இருந்து விலகினார் த்ரிஷா.
இவரின் கதாபாத்திரத்தில் நடிக்க அடுத்ததாக படக்குழுவினர் காஜல் அகர்வாலை அணுகியிருக்கின்றனர். ஆனால் அவரோ பெரும் தொகையை சம்பளமாக கேட்பதால், தற்போது அனுஷ்காவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ‘சைரா நரசிம்ம ரெட்டி” படத்தில் கெளரவத் தோற்றத்தில் அனுஷ்கா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை அனுஷ்கா ஏற்பாரா..? இல்லை மறுப்பாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.