Tamil Movie Ads News and Videos Portal

மாஸ்டருக்கு குறி வைக்கும் அமேசான்!

சில வாரங்களாக தமிழ்ப்படங்கள் எல்லாம் இனி நேரடியாக இணையத்தில் வெளியாகும் என்ற தகவல் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் மாஸ்டர் படத்தையும் விலை கேட்டதாக ஒரு தகவல் வந்தது. மேலும் பல ரசிகர்களையும் அது திணறடித்தது.

ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தது போல படத்தின் தயாரிப்பாளர் தரப்பில் தெளிவான விளக்கம் வந்துவிட்டது. மாஸ்டர் நிச்சயமாக திரையரங்களில் தான் வெளிவரும் என்று உறுதியளித்துள்ளது தயாரிப்பு தரப்பு. அதனால் அமேசான் என்ன குறி வைத்தாலும் மாஸ்டர் சிக்க மாட்டார் என்பது திண்ணம்