கன்னியாகுமரியில் தொடங்கிய “மூக்குத்தி அம்மன்”
ஆர்.ஜே.வாக இருந்து நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக உயர்ந்து தற்பொழுது இயக்குநராகவும் அவதாரம் எடுத்திருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. அவர் தற்போது நடித்து இயக்கவிருக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் இவருக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று கன்னியாகுமரியில் இருக்கும் பகவதி அம்மன் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்ளவில்லை. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். வேல்ஸ் ப்லிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார்.