இசையமைப்பாளராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போது படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவர் இசையமைத்த காலகட்டங்களில் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரின் இல்லற வாழ்க்கையும் சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது. இடையில் அவர்களுக்குள் ஏதோ முட்டல் மோதல் தொடங்க, உடனே பலரும் அவர்கள் இருவரும் பிரியப் போகிறார்கள்.
விவாகரத்து வாங்கப் போகிறார்கள் என்று ஆள் ஆளுக்கு பேசத் தொடங்க, ஜி.வியுடன் இணைந்து இருக்கும் புகைப்படம் ஒன்றை சைந்தவி வெளியிட்டு, அதில் “என் ஒரு பாதி ஜி.வி.பிரகாஷ்” என்று தெரிவித்து இப்பிரச்சனையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பவர்களின் வாயை அடைத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை ஃபார்வர்டு செய்ததன் மூலம் தானும் அதைத் தான் சொல்ல விரும்புகிறேன் என்று அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிறார் ஜி.வி.