Tamil Movie Ads News and Videos Portal

‘நாடோடி பாடல்’ புதிய அப்டேட்!

வேறுபட்ட வாழ்வின் மூலம் வேறுபட்ட புரிதலை விளக்கும் ‘நாடோடி’: உலக விதிமுறைகளுக்கு அப்பால் நகர்ந்து, குறைந்தபட்ச தேவைகளிலும் சுதந்திரத்தைக் கண்டறிய முடியும் என்பதை ஒரு நாடோடியின் பார்வையில் முன் வைக்கிறது ‘நாடோடி பாடல்’. சாம் லாரன்ஸ் இசையமைத்திருக்கும் இப்பாடல் வாழ்க்கையின் தேவைகளைப் பற்றிய வேறுபட்ட புரிதலை நமக்கு வழங்குகிறது. மதன் கார்க்கியின் வரிகள் ஆழமான சுயபரிசோதனையை ஒரு நாடோடியின் கருத்துக்கள் மூலம் படம் பிடித்துக் காட்டுகிறது. நாட்டுப்புற மெட்டில் அமைந்துள்ள இப்பாடலைப் பாடகர் விஜய் பிரகாஷ் பாடியுள்ளார். அலைந்து திரியும் நாடோடியின் வாழ்வு எப்படி நம்முள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகிறது என்பதை அறிய இப்பாடலை பாமியூசிக் யூடியூப் தளத்தில் கேட்கலாம்.