Tamil Movie Ads News and Videos Portal

காதல் தம்பதியினரின் வாழ்வை மாற்றும் ஓ மை கடவுளே!

வரும் வெள்ளியன்று வெளியாக இருக்கும் ஓ மை கடவுளே படத்தைப் பற்றி படத்தின் நாயகி
வாணி போஜன் கூறியதாவது….

“ஓ மை கடவுளே” என்னென்றும் என் இதயத்திற்கு நெருக்கமான படமாக இருக்கும். பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தெர்ந்தெடுத்த பாத்திரங்களை மட்டுமே செய்து வருகிறேன். தெலுங்கில் ஒரு மிகப்பெரும் ஹிட் அறிமுகத்துக்கு பிறகு தமிழில் ஒரு அற்புதமான வாய்ப்பாக, எனக்கு மிகப்பரும் ஆசிர்வாதமாக “ஓ மை கடவுளே” படம் அமைந்திருக்கிறது. காதல் கதைகளுக்கென்றே ஒரு வடிவம் இருக்கும் ஆனால் இயக்குநர் அஷ்வத் அதில் ஃபேண்டஸி தன்மையை புகுத்தி படத்தை மேலும் வெகு அழகாக மாற்றிவிட்டார்.

மேலும் இப்படம் பேசும் தார்மீக தத்துவ நியாயங்கள் எனை இப்படம் நோக்கி வெகுவாக ஈர்த்தது. இப்படம் புதிதாக காதலிக்கும் இளைஞர்கள், காதலில் வெகு காலம் பயணம் செய்பவர்கள், காதல் தம்பதியர் என அனைவருக்கும் வாழ்வுன் பார்வையை மாற்றித்தரும் பெரு விருந்தாக அமையும். அசோக் செல்வனின் மிகச்சிறந்த, அர்ப்பணிப்பு மிக்க நடிப்பு இப்படத்திற்கு பிறகு வெகுவாக பேசப்படும். இப்படத்திற்கு பிறகு அவர் பெரும் உயரங்களுக்கு செல்வார். ரித்திகா சிங்கின் துடிப்பான நடிப்பு அவரை அனைவர் மனங்களிலும் குடியிருக்க செய்யும். இப்படத்தில் சாரா அற்புதமான பங்கை அளித்துள்ளார். அவரது காமெடி கலந்த குணச்சித்திர நடிப்பு இதுவரையிலான அவரது அடையாளத்தையே மாற்றிவிடும் என்றார்.