காமெடி படங்களுக்கென்றே தமிழகத்தில் தனி ரசிகர் வட்டம் இருக்கிறது. குடும்பங்கள் இணைந்து குதூகலத்துடன் கொண்டாடும் படங்களாக, அவ்வகை படங்கள் இருக்கின்றன. விநியோகஸ்தர்கள் காமெடி படங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டிருக்கிறார்கள். வீரா, மாளவிகா நடிப்பில் உருவாகியுள்ள “ அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” படம் தலைப்பு முதலாக வெளியிடப்பட்ட சிறு, சிறு வீடியோ புரமோக்களால் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனயடுத்து தற்போது CBFC சென்சார் ஃபோர்ட் படத்திற்கு U சான்றிதழ் வழங்கியுள்ளதால் படக்குழு பெரும் உற்சாகத்தில் மிதந்து வருகிறது. இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது