‘பொன்னியின் செல்வன்’ ஆர்வம் காட்டாத தெலுங்கு நடிகர்கள்
அமரர் கல்கியின் நாவலான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் மாதம் 22 தேதி முதல் தாய்லாந்து காடுகளில் தொடங்கி, தொடர்ச்சியாக 50 நாட்கள் நடைபெறவிருக்கிறது என்ற செய்தி ஏற்கனவெ வெளியாகியும் இன்று வரை அது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் முன்னணி நாயகர்களான விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராய் போன்றோர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளத் தயாராகி வருகின்றனர். மூன்று மொழிகளில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் தெலுங்கு நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்து, பிரபாஸ், ராம்சரண், மகேஷ் பாபு ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், ஆனால் அவர்களில் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டாததாகவும் கூறப்படுகிறது.