விஜய் தேவரகொண்டா, ஷாலின் பாண்டே நடிப்பில் 2017ம் ஆண்டு வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் இயக்குநர் சந்தீப் வாங்கா. இவரே இப்படத்தை ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் இயக்கினார். இப்படம் வெற்றிகரமாக ஓடி 300 கோடி வசூலித்தது. அது போல் பாகுபலி திரைப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் இந்திய அளவில் பேசப்படும் நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் சமீபத்தில்
வெளியான “சாஹோ” திரைப்படம் ஹிந்தியில் மட்டும் சுமார் 100 கோடி வசூலித்தது. இதனையடுத்து தற்போது பிரபாஸ், சந்தீப் வாங்கா ஜோடி இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இருவருக்குமே ஹிந்தி உலகில் மார்க்கெட் உருவாகியிருப்பதால், தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் இப்படம் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் “ஜான்” படத்தில் நடிக்க ஆயத்தமாகி வரும் பிரபாஸ் இப்படத்தை முடித்துவிட்டு, சந்தீப் படத்தில் நடிப்பார் என்று தெரிகிறது.