பிரசாத் ஸ்டூடியோ…இளையராஜா விவகாரம்- பத்திரிகையாளர் கேள்வி
சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டூடியோவுக்கு இசையமைப்பாளர் இளையராஜாவை பார்க்க… பேட்டி எடுக்க…, நிகழ்ச்சிக்காக… எத்தனையோ முறை சென்று இருப்பேன். அன்றைய நாள் மறக்க முடியாத நாள் ஆக இருக்கும். இப்போது பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்துக்கும், இளையராஜாவுக்கும் பிரச்னை. பல ஆண்டுகளாக இசைப்பணி செய்து கொண்டிருந்த இளையராஜா அங்கிருந்து கிட்டத்தட்ட வெளியேற்றப்பட்டுவிட்டார்.
இப்போது பிரசாத் ஸ்டூடியோ சென்றால், வாசலில் செக்யூரிட்டிகள் நிறுத்துகிறார்கள்,,”” ராஜாசார் ஸ்டூடியோவுக்கு போகணும்” என்றால், “அவர் இங்கு கிடையாது, இடத்தை காலி செய்யுங்கள்”என்று விரட்டுகிறார்கள். துரத்துகிறார்கள்.
தினமும் காலையில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு வரும் இளையராஜா, மாலை வரை தவம் மாதிரி இசைப்பணி செய்து வந்தார்.
அந்த இசைக்கூடத்தில் காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்கள், பின்னணி இசை உருவாகியுள்ளது. அந்த இசையை கோடிக்கணக்கானவர்கள் கேட்டு, பார்த்து ரசித்து இருக்கிறார்கள். அவர்கள் இதை கேள்விப்பட்டு சாபம் இட்டாலே…
வாழும் காலத்தில் ஒரு நல்ல கலைஞனை இப்படி அவமானப்படுத்துவதும், இப்படி துரத்துவதும் சரியா?. தமிழ் சினிமா அமைப்புகள், மூத்தவர்கள், இளையராஜா ரசிகர்கள், அரசு இந்த விஷயத்தில் மவுனம் காப்பது சரியா?
-மீனாட்சி சுந்தரம், பத்திரிகையாளர்.