தமிழ் சினிமாவின் முக்கிய ஒளிப்பதிவாளர்களில் சுகுமாரும் ஒருவர். மைனா படத்தில் இவரது ஒளிப்பதிவு சிலாகிக்கப்பட்டது நினைவிருக்கலாம். பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்த “வர்மா” படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர். சமீபத்தில் பாலா இயக்கிய வர்மா படத்தை பட நிறுவனம் வெளியிடாதது பற்றி இவர் கருத்து
தெரிவித்திருந்தார். அதில், “தான் பணியாற்றிய படங்கள் எல்லாமே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் தன்னை அறிவுஜீவி என்று எண்ணிக் கொண்ட ஒருவரின் தூண்டுதலால் தான் அப்படம் வெளியாவது தடைபட்டது. தயாரிப்பு நிறுவனம் இந்த விசயத்தில் தவறு செய்துவிட்டது. “ என்று பேசியிருந்தார். ஆனால் அப்படி தூண்டிய நபர் யார் என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.