Tamil Movie Ads News and Videos Portal

தமிழில் ஜெயிக்க வேண்டும்- அல்லு அர்ஜுன்!

பல தமிழ் நடிகர்களை அல்லுவிட வைக்கும் அளவில் இருக்கிறது அல்லு அர்ஜுனின் புஷ்பா பட என்ட்ரி. அதிரிபுதிரியாக படத்தின் தமிழ் வெர்சன் பாடல்கள் ஹிட்டடித்திருக்கும் வேளையில் நேற்று படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கும் நிலையில் நேற்று அல்லு அர்ஜுன் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய வார்த்தைகள் அல்டிமேட் ரகம்.

“தமிழில் ஜெயிக்க வேண்டும் என்பது எனது கனவு. இங்கு பாட்டு ஹிட் ஆனவுடன் அவ்வளவு சந்தோஷப்பட்டேன். தமிழில் ஜெயித்தால் தான் வாழ்வு முழுமையாகும்” என்றார்… அட இந்த அன்பு போதுமே ரசிகர்கள் கொண்டாடுவார்களே