Tamil Movie Ads News and Videos Portal

ஜனவரியில் வெளியாகிறது “ராஜாவுக்கு செக்”

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஆகச் சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் சேரன். பின்னர் அவர் நடிப்பில் கவனம் செலுத்தியப் பின்னர், படங்கள் இயக்குவதை வெகுவாக குறைத்துக் கொண்டார். அடுத்து அவர் இயக்கிய படங்களும் கூட பெரிதாக செல்லவில்லை. ஆனால் அவர் நடிக்கும் திரைப்படங்கள் ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்ப்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில் அறிமுக இயக்குநர் சாய் ராஜ்குமார் இயக்கியிருக்கும் திரைப்படமான ‘ராஜாவுக்கு செக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சேரன் நடித்துள்ளார். இவரோடு சிருஷ்டி டாங்கே, சரயு, நந்தனா வர்மா, இர்பார் போன்றோரும் நடித்துள்ளனர். இப்படம் பொங்கல் முடிந்த அடுத்த இரு வாரங்களுக்குள் வெளியாகலாம என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் வெளியாகியதும் சேரன் விஜய் சேதுபதி நடிக்கும் திரைப்படத்தின் இயக்கம் தொடர்பான பணிகளை தொடங்குவார் என்று தெரிகிறது.