கடந்த 2018ம் ஆண்டு ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஸ்மான் குரானா, தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றதோடு, வசூலையும் குவித்த திரைப்படம் ‘அந்தாதுன்’. இப்படத்தின் தமிழ் ரீமேக்கை மோகன் ராஜா இயக்கவிருக்கிறார்.
ஆயுஸ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடிக்க, தபு கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்ற கேள்வி எழுந்தது. தபுவின் கதாபாத்திரம் சற்று நெகடிவ்வான கதாபாத்திரம் என்பதோடு, வலிமையான கதாபாத்திரமும் கூட என்பதால் ரம்யா கிருஷ்ணன் அக்கதாபாத்திரத்தில் நடிக்க தேர்வாகியுள்ளார். ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது யார் என்று தெரியவில்லை. பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இப்படத்தை தயாரிக்கிறார்.