‘இறுதிச்சுற்று’ திரைப்படத்தின் மூலம் பாக்ஸிங் வாழ்க்கையைத் துறந்து நடிகையாக மாறியவர் ரித்திகா சிங். இவர் அப்படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ‘ஆண்டவன் கட்டளை’ மற்றும் ராகவா லாரன்ஸ் ஜோடியாக ‘சிவலிங்கா’ ஆகியப் படங்களில் நடித்திருந்தார். தற்போது ‘பாக்ஸர்’ படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் சமூகவலைதளத்தில் ரசிகர்களிடம் நேரடியாக உரையாடினார். அதில் பல ரசிகர்களும் பல கேள்விகள் கேட்க, அவர்களின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்தார் ரித்திகா.
அதில் ஒரு ஆண் ரசிகர் ‘யாரையாவது காதலிக்கிறீர்களா..? என்னைத் திருமணம் செய்து கொள்வீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ரித்திகா நான் 5 பேரைத் திருமணம் செய்யப் போகிறேன். அதில் ஒருவராக உங்களையும் திருமணம் செய்து கொள்கிறேன்’ என்று தெரிவித்தார். மற்றொரு ரசிகர் ‘உண்மையாகவே 5 பேரை திருமணம் செய்யப் போகிறீர்களா..? என்று கேட்டதற்கு, “உண்மையாகவே சொல்கிறேன். குறைந்தது 5 பேரையாவது திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன். இல்லையென்றால் இறுதிவரை திருமணம் செய்யாமல் நடிகையாக வாழ்ந்து இறந்துவிடுவேன்..”என்று தெரிவித்துள்ளார்