திருமணத்திற்குப் பின்னரும் திரைப்படங்களில் நடித்து வரும் சமந்தா, அவ்வபோது கவர்ச்சிப் புகைப்படங்களை வலைதளத்தில் பதிவிட்டு, ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டாலும் கூட, மற்றவர்களிடம் மரியாதையுடன் பந்தா இன்றி பழகுவதில் எப்பொழுதுமே சமத்தானவர் என்று பெயர் வாங்கியவர். அந்தப் பேரை மீண்டும் ஒரு முறை நிருபித்திருக்கிறார் சமந்தா.
அவரிடம் 8 ஆண்டுக்கும் மேலாக உதவியாளராக பணியாற்றிய நபர் புதிதாக ஒரு ரெஸ்டாரண்ட் ஒன்றினை தொடங்கி, அதன் தொடக்க விழாவிற்கு சமந்தாவையும் அழைத்திருக்கிறார். அதில் முதல் ஆளாக கலந்து கொண்ட சமந்தா அங்கு வந்த அனைவருக்கும் தன் கையாலே உணவு பரிமாறியதோடு, ஒவ்வொரு உணவையும் ருசித்து அது தொடர்பான டிப்ஸையும் கொடுத்து அசத்தி இருக்கிறார். இதைப் பார்த்த பலரும் ஒரு முதலாளி போன்று நடந்து கொள்ளாமல் நட்பாக நடந்து கொண்ட அவரது அணுகுமுறையில் அதிசயித்துப் போய்விட்டனராம்.