நடிகர் நடிகைகள் சினிமாவில் பிரபலமாக இருக்கும் போதே வேறு ஒரு தொழிலில் முதலீடு செய்வது வழக்கமானது தான். நடிகர் ஆர்யா, சூரி போண்றோர் ஏற்கனவே ஹோட்டல் தொழிலில் முதலீடு செய்திருக்கின்றனர். அது போல் தற்போது நடிகை சமந்தா பள்ளிக்கூடத்தின் தாளாளர் ஆகியிருக்கிறார். இவர் தன் நண்பர்களுடன் இணைந்து ஹைதராபாத்தில் ஹீப்ளி மலைப்பகுதியில் ஒரு பள்ளியைத் துவக்கி உள்ளனர்.
குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒரு முழுமையான கல்வியைக் கற்றுத் தரும் நோக்கத்துடன் இப்பள்ளியை தொடங்கியிருக்கும் சமந்தா, இதை தொழில் முனைப்போடு தொடங்காமல் சேவை எண்ணத்தோடு தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது “96” படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்திருக்கும் சமந்தா இப்படத்தின் வெளியீட்டை ஆவலோடு எதிர் நோக்கியிருக்கிறார்.