தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. அவரது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே தெலுங்கில் முன்னணி நடிகரும் நாகர்ஜூனாவின் மகனுமான நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்தார். அவருக்கு பட வாய்ப்புகளும் குறையாமல் வந்த வண்ணம் இருந்தது.
‘சூப்பர் டீலக்ஸ்’ ‘இரும்புத் திரை’ சீமராஜா ஆகிய படங்களில் நாயகியாகவே நடித்தார். தற்போது ‘96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான “ஜானு”வில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி சமந்தாவின் நடிப்பும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. இந்த பாராட்டுகளோடு திரைப்படங்களில் நடிப்பதை சில காலங்களுக்கு நிறுத்திக் கொள்ளலாம் என்கின்ற முடிவுக்கு வந்திருப்பதாக தெரிகிறது. சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அவர் நடிக்க வருவார் என்று கூறப்படுகிறது.