வெங்கட் பிரபு இயக்கத்தில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கியிருக்க வேண்டிய திரைப்படம் “மாநாடு”. ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல், தாய்லாந்து கிளம்பிச் சென்றுவிட்டார் சிம்பு. இதனால் கோபமடைந்த தயாரிப்பாளர் தரப்பு படத்தை கைவிடுவதாக அறிவித்தது. பின்னர் இருவருக்குமிடையில் ஏற்பட்ட சமாதான நடவடிக்கைகளைத் தொடர்ந்து,
மீண்டும் “மாநாடு” தொடர்பான பணிகள் தொடங்கியிருக்கின்றன. இதில் வில்லன் நடிகராக ‘நான் – ஈ” ‘புலி’ படங்களில் நடித்த சுதிப் நடிக்கவிருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் சுதிப், “மாநாடு படத்தில் சிம்புவிற்கு வில்லனாக நடிப்பது தொடர்பாக வரும் செய்திகள் உண்மையில்லை. அதில் நடிப்பது தொடர்பாக யாரும் என்னை இதுவரை அணுகவில்லை என்று விளக்கம் அளித்திருக்கிறார்.