‘காப்பான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது “சூரரைப் போற்று” படத்தில் நடித்து வருகிறார். முதல் பட்ஜெட் விமானத்தை வடிவமைத்த கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தில் அபர்ணா பாலமுரளி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர்த்து, ஜாக்கி ஷெராப், பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கவிருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகிய நிலையில் தற்போது, இப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் குருவியின் உடலில் சூர்யாவின் முகம் இருப்பது போன்றும், அதில் “பருந்தாகுது ஊர்க் குருவி; வணங்காதது என் பிறவி” எனத் தொடங்கும் பாடல் வரிகளும் இடம் பெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறது. இப்படத்தின் டீசர் வரும் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.