இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் வெற்றி பெற்றதோடு, ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பையும் பெற்ற திரைப்படம் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்”. ‘பீட்ஷா’ ‘சூது கவ்வும்’ பாணியில் உருவாகியிருந்த இப்படத்தில் துல்கர் சல்மான் நாயகனாகவும், ரீது வர்மா நாயகியாகவும் நடித்திருந்தனர்.
இதில் ரீதுவிற்கு சபலப்படும் ஆண்களை மடக்கி பணம் கொள்ளையடிக்கும் கதாபாத்திரம். இதில் கலக்கியிருந்த ரீது வர்மா, தற்போது புதிதாக மற்றொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் அசோக் செல்வன் நாயகனாகவும் மற்றொரு நாயகியாக நித்யா மேனனும் நடிக்கிறார்கள். இதில் அசோக்செல்வன் மற்றும் ரீது வர்மா இருவருக்கும் சமையல் கலைஞர்கள் வேடம். அனி சசி என்கின்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவிருக்கிறது.