பூவரசம் பீப்பி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமானவர் ஹலிதா சமீம். இத்திரைப்படம் விமர்சனரீதியாக பெரும் வரவேற்ப்பைப் பெற்றது. இதனையடுத்து தற்போது அவர் ‘சில்லுக் கருப்பட்டி” என்ற தலைப்பில் நான்கு குறுங்கதைகளை இணைத்து ஒரு புதிய திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இப்படத்தில் சாய் தன்ஷிகா,
சமுத்திரக்கனி ஆகியோர் ஒரு கதைக்களனில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். இப்படம் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற திரைப்பட விழாவில் கலந்து கொண்டு சிறந்த திரைப்படத்திற்கான இரண்டாவது இடத்தைப் பிடித்து விருது வென்றது. மேலும் இப்படத்தை பார்த்து கண்கலங்கிய சூர்யா ஜோதிகா இருவருமே இப்படத்தை தங்கள் 2 D நிறுவனத்தின் வாயிலாக வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். இது இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று மனம் மகிழ்ந்திருக்கிறார் இயக்குநர் ஹலீதா சமீம்.