வரும் ஜனவரி 24ம் தேதி அன்று எதிரும் புதிருமான கதைக்களம் கொண்ட இரு படங்கள் வெளியாகவிருக்கின்றன. அதில் ஒன்று மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளியாக நடித்திருக்கும் “சைக்கோ” திரைப்படம். இளையராஜா இசையமைப்பில் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகி இருக்கிறது. “சைக்கோ” படம் தலைப்பிற்கு ஏற்றார் போல் படு சீரியஸான படமாக உருவாகி இருக்கிறது. நாயகியாக அதிதிராவ் நடிக்க, நித்யாமேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றொரு படமான “டாணா” படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல் உருவாகி இருக்கும் கலகலப்பான காமெடிப்படம்.
வைபவ் நாயகனாக நடித்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைக்க யுவராஜ் சுப்பிரமணீ என்னும் அறிமுக இயக்குநர் இப்படத்தினை இயக்கியிருக்கிறார். நந்திதா ஸ்வேதா, யோகிபாபு, பாண்டியராஜன் மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தின் கதைக்கரு போலிஸாக ஆகவிரும்பும் ஒரு மனிதனுக்கு எதிர்பாராத விதமாக குரல் பெண் தன்மை கொண்ட குரலாக மாறிவிட்டால் என்னவாகும் என்பதனை அடிப்படையாக வைத்து இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மிக சீரியஸான ஒரு படம். கலகலப்பான மற்றொரு படம். இரண்டில் எப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.