இயல்பு வாழ்க்கையில் ஒரு பெண்ணை குழந்தை இல்லை என்பதைச் சொல்லியே பாடாய்படுத்தும் சமூகம், அதே விசயத்தில் நடிகைகளை குழந்தை பிறக்கப் போகிறது என்று சொல்லி படுத்தியெடுக்கிறது. திருமணம் முடிந்தப் பின்னரும் கதாநாயகிகள் நாயகியாகவே தொடரும் ஆரோக்கியமான சூழல் தற்போது தான் தமிழில் மெல்ல மெல்ல தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது. அதற்குள் அச்சூழலை குழி தோண்டிப்புதைக்கும் முயற்சிகளும் அரங்கேறி வருகின்றன.
சமீபத்தில் ‘காத்து வாக்குல காதல்’ என்ற படத்தில் நடிக்காமல் நடிகை சமந்தா விலகிவிட்டார் என்றும், அதற்குக் காரணம் அவர் கர்ப்பமாக இருப்பது தான் என்றும் ஒரு வதந்தி கிளம்பியது. இந்த வதந்தி பொய் என்று நிருபிக்க, ஜிம்மில் இறுக்கமான ஒரு பேண்டை வயிற்றில் கட்டிக் கொண்டு 100 கிலோ எடையை தூக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் சமந்தா. இப்பொழுது மீண்டும் ‘காத்து வாக்குல ஒரு காதல்’ படத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுடன் இணைந்து பணியாற்றுவது சந்தோசம் அளிப்பதாக தெரிவித்திருப்பதன் மூலம் மீண்டும் தான் கர்ப்பமில்லை என்பதினை சொல்லாமல் சொல்லியிருக்கிறார் சமந்தா.