சிறந்த நடிகர் எனப் பெயரெடுத்த போஸ் வெங்கட் தற்போது இயக்குநர் அவதாராம் எடுத்துள்ளார். அவர் கன்னிமாடம் என்ற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு
நடிகர் விஜய் சேதுபதி பேசியது…
“எல்லோருக்கும் காதலர் தின நல்வாழ்த்துகள். நடிகர் போஸ் வெங்கட் சிறப்பான ஆளுமையாளர். அவரை மெட்டி ஒலி தொலைக்காட்சித் தொடரில் பார்த்து வியந்திருக்கிறேன். அவரது முகத்தை பார்த்தாலே நம்முள் ஒரு நேர்மறைத் தன்மை கொண்ட நம்பிக்கை பிறக்கும். நாம் சோர்வாகும் போது, தோல்வி எண்ணங்கள் வரும்போது அவரது முகத்தை பார்த்தாலே போதும் பெரும் நம்பிக்கையை அந்த முகம் தரும். நான் இப்படத்தின் பாடல்களை கேட்கவில்லை. எல்லோரும் இங்கு பேசுவதைப் பார்க்கும் போது படம் கண்டிப்பாக நேர்த்தியானதாக இருக்குமென தெரிகிறது. போஸ் வெங்கட் வெகு திறமை வாய்ந்தவர். கன்னி மாடம் வெற்றிபடமாக அமைய வாழ்த்துகள்” என்றார்