பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ‘கேப்பிடல் ஃப்லிம் வொர்க்’ நிறுவனம் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் திரைப்படம் உட்பட சில படங்களை தயாரித்துள்ளது. இவர்கள் தயாரிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ‘திருடன் போலீஷ்’. தற்போது இந்நிறுவனம் முதன் முறையாக வெஃப் சீர்ஸ் ஒன்றை தயாரிக்கவிருக்கிறது.
பின்னணிப் பாடகரும் நடிகருமான எஸ்.பி.சரண் முதன் முறையாக இயக்கவிருக்கும் இந்த வெஃப் சீரிஸ்-க்கு “அதிகாரம்” என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இது குறித்துப் பேசிய இயக்குநர் எஸ்.பி.சரண், “முதன்முறையாக வெஃப் சீரிஸில் தேசிய மற்றும் மாநில அளவில் நிகழும் சமகால அரசியலைப் பேசவிருக்கிறோம். கதை, வசனத்தை இயக்குநரான கேபிள் சங்கர் எழுதியுள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்ய, தீனா தேவராஜன் இசையமைக்கவிருக்கிறார். வெள்ளைப் பூக்கள் தேவ், இளவரசு, பிக்பாஸ் புகழ் அபிராமி, ஜான் விஜய், சூது கவ்வும் சிவக்குமார், வினோதினி வைத்தியநாதன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்.