தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையான நயன்தாரா தனது காதலரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் உடன் இணைந்து சென்ற வருடத்தின் இறுதியில் தமிழகத்தின் தென் பகுதியில் இருக்கும் பிரசித்திப் பெற்ற கோயில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து வந்தார். இதைப் பலரும் ஆச்சரியமாகப் பார்த்தனர். இதன் பின்னணி என்ன..? என்பது தற்போது தெரியவந்துள்ளது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் “மூக்குத்தி அம்மன்” படப்பிடிப்பில் நடித்து வரும் அவர், படக்குழுவினரைப் போலவே விரதம் இருந்து படத்தில் நடித்து வருகிறார். இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் காலில் ஏதும் ஆணி குத்துவதை தடுக்கும்
பொருட்டு, முதல் நாள் படப்பிடிப்பில் காலில் செருப்பு அணிந்து கலந்து கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் கோவிலின் சுற்றுவட்டாரப்பகுதி என்பதால் அங்கு செருப்பு காலுடன் அவர் நடமாடுவதை சில பொதுமக்கள் எதிர்த்திருக்கின்றனர். இதனைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்த நயன், கால் பிறண்டு தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து தான் செருப்பு காலுடன் நடந்ததால் தான் தனக்குக் காயம் ஏற்பட்டது என்று நம்பத் தொடங்கிய நயன் படப்பிடிப்புக் குழுவினர் சிலரிடம் இது தொடர்பாக தன் வருத்தத்தை தெரிவித்ததோடு, அன்றிலிருந்து அப்பகுதியில் இருக்கும் பிரசித்தி பெற்ற இடங்களில் சாமி தரிசனம் செய்திருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.