இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி வட்டாரப் பகுதிகளில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியிருக்கிறது. மாரி செல்வராஜின் முந்தைய படமான ‘பரியேறும் பெருமாள் படத்தைப் போன்றே இப்படமும் நெல்லை மண் மணத்தோடு உருவாகவிருப்பதால், அந்த நெல்லைத் தமிழைப் பேசும் இளைஞர்கள் படத்தில் நடிப்பதற்கு தேவைப்பட்டிருக்கிறது.
இவர்களை ஸ்பாட்டிலேயே ஆடிஷன் செய்து தேர்வு செய்து இருக்கிறார்கள் படக்குழுவினர். இவர்கள் தனுஷின் நண்பர்களாக நடிக்கவிருப்பதாகவும், அவர்கள் நடிப்புக்கு புதிது என்பதால், முறையான நடிப்புப் பயிற்சி அவர்களுக்கு கொடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நண்பர்களில் ஒருவராக யோகி பாபுவும் நடிக்கவிருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்திலும் யோகி பாபு நாயகனின் நண்பனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.